மோட்டார் சைக்கிள்- டிப்பர் வாகனம் விபத்து ஆசிரியர் மரணம்!!!
திருகோணமலை,கந்தளாய்- சேருவில வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஆசிரியரொருவர் உயிரிழந்துள்ளதாக சூரியபுர பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்து இன்று (15) மாலை இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் மாத்தறை - கபுறுபிடிய பகுதியைச் சேர்ந்த சுபுன் கொமசாறு (32 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது சேருவில, தெஹிவத்த பாடசாலையில் ஆசிரியராக கடமையாற்றி வரும் இவர் கந்தளாய் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த போது வேகமாக வந்த டிப்பர் வாகனம் மோதியதாகவும் ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
உயிரிழிருந்த ஆசிரியரின் சடலம் தற்பொழுது கந்தளாய் வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் டிப்பர் வாகனத்தின் சாரதியை கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட டிப்பர் வாகனத்தின் சாரதியை நாளைய தினம் கந்தளாய் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் சூரியபுர பொலிஸார் தெரிவித்தனர்.


