Header Ads

Breaking News
recent

24 மணிநேரத்தில் 85 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி : அமெரிக்கா


அமெரிக்காவில் கடந்த 24 மணிநேர காலப்பகுதியில் 85 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய, அமெரிக்காவில் கடந்த 24 மணிநேர காலப்பகுதியில் 85 ஆயிரத்து 988 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

அத்துடன், அமெரிக்காவில் இதுவரை கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 92 இலட்சத்து 7 ஆயிரத்து 225 ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், அமெரிக்காவில் கொரோனா தொற்றினால் நேற்று மாத்திரம் 984 உயிரிழப்புகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

இதற்கமைய, அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 34 ஆயிரத்து 114 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, அமெரிக்காவில் இதுவரை 59 இலட்சத்து 71 ஆயிரத்து 175 பேர் கொரோனா தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனர்.

இதன்படி, கொரோனா தொற்றினால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் வரிசையில் அமெரிக்கா தொடர்ந்தும் முதல் இடத்தில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது
Powered by Blogger.