Header Ads

Breaking News
recent

கிழக்கின் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 43 ஆக உயர்வு !!!!


வாழைச்சேனையில் மேலும் 16 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அழகையா லதாகரன் தெரிவித்தார்.


அத்துடன் அவர்களுடன் தொடர்புடையவர்களுக்கு தற்போது பி.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


முன்னதாக கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 11 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.



பேலியகொடை மீன்சந்தையுடன் தொடர்புபட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு அதில் 60 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி ஆர் பரிசோதனையில் மேலும் 16 பேருக்கு கொரோனா தொற்று உள்ளதாக கண்டறியப்படடதையடுத்து கிழக்கில் இதுவரை 43 பேருக்கு கொரோனா தொற்று உள்ளவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளது .
Powered by Blogger.