நிந்தவூர் அக்கரைப்பற்று பிரதான வீதியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் 5 பேர் படுகாயம்!!!!
(ஹாசீம் சஜீத் - இறக்காமம்)
நிந்தவூர் அக்கரைப்பற்று பிரதான வீதியில் நேற்று இரவு (17) நிந்தவூர் சிங்கர் மெகா பிளஸ் எதிரே நேருக்கு நேர் இரண்டு மோட்டார் சைக்கிள் மோதுண்டு இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
பின்னர் அதனை பின்தொடர்ந்து வந்து மற்றுமொரு மோட்டார சைக்கிளும் அதனுடன் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பெண் உட்பட 5பேர் படு காயங்களுடன் சாம்மாந்துரை வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.