ஊரடங்கு சட்டவிதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 83 பேர் கைது!!!!!
தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டவிதிமுறைகளை மீறி பயணித்த குற்றச்சாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 83 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி, தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டவிதிமுறைகளை மீறி பயணித்த குற்றச்சாட்டில் இதுவரை 596 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறித்த காலப்பகுதியில் ஊரடங்கு சட்டவிதிமுறைகளை மீறி பயணித்த 76 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கம்பஹா மாவட்டத்தின் 33 பொலிஸ் பிரிவுகளுகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலில் உள்ளது.
அத்துடன், குளியாப்பிட்டிய, கிரிஉல்ல, நாரம்மல, பன்னல, தும்மமலசூரிய ஆகிய பகுதிகளிலும் மற்றும் களுத்துறை மாவட்டத்தின் அகலவத்தை மற்றும் பாலிந்த நுவர பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பல பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, அகலவத்தை பிரதேச செயலகத்திற்குட்பட்ட அகலவத்தை, கொரக்கொட, பேரகம, தெபிலிகொட, கெக்குளுந்தர வடக்கு ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பாலிந்த நுவர பிரதேச செயலகத்திற்குட்பட்ட பெல்லன பகுதியும் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
