Header Ads

Breaking News
recent

வீட்டில் இருந்து தொழில் புரியும் நடைமுறையை மீண்டும் நடைமுறைப்படுத்துமாறு அறிவுறுத்தல் : ஜனாதிபதி செயலகம்


கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் வேலைத்திட்டத்திற்கு அமைவாக வீட்டில் இருந்து தொழில் புரியும் நடைமுறையை மீண்டும் நடைமுறைப்படுத்துமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாணத்தின் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் உள்ள அரச நிறுவனங்களுக்கே இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலாளர் பி.பி. ஜயசுந்தரவினால் இதற்கான அறிவுறுத்தல்கள் அனைத்து அரச நிறுவனங்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

மேல்மாகாணத்தில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்ப்டுவதை தொடர்ந்து, மக்கள் நடமாட்டத்தை குறைப்பதற்காகவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கபட்டுள்ளது.
Powered by Blogger.