மினுவங்கொடை பொலிஸ் நிலைய பொதுமக்களின் பொலிஸ் சேவைகள் கம்பஹா பொலிஸ் நிலையத்திற்கு மாற்றம்!!
இன்று மினுவங்கொடை பொலிஸ் நிலையத்திலுள்ள சிற்றுண்டிச்சாலையில் தொழில்புரியும் 55 வயதுடைய ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.
குறித்த நபரின் மகன், மினுவங்கொடை ஆடைத்தொழிற்சாலையில் தொழில்புரிந்து வருவது தெரியவந்துள்ளது.
இவர் கட்டுநாயக்க ஆடிஅம்பலம பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
இதனை தொடர்ந்து மினுவங்கொடை பொலிஸ் நிலையம் முழுமையாக மூடப்பட்டு பொதுமக்களின் பொலிஸ் சேவைகள் இன்றுமுதல் கம்பஹா பொலிஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
