சற்றுமுன் கிடைத்த செய்தி : யாழில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி!!!!
புங்குடுதீவில் ஏற்கனவே கொரோனா தொற்றுக்குள்ளான பெண் பயணித்த பேருந்து நடத்துனருக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கொழும்பு – பருத்தித்துறை நோக்கி சேவையில் ஈடுபடும் பேருந்து நடத்துனருக்கே இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, வட மாகாண சுகாதார சேவை பணிப்பாளர் வைத்தியர் கேதீஸ்வரன் இதனைக் கூறியுள்ளார்.
சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த 23 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளின் மூலம் இந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
