ஸஹ்ரான் குழு பயன்படுத்திய வாகனம் காத்தான்குடியில் மீட்பு!!!!!
உயிர்த்த ஞாயிறு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் உள்ள ஒருவர் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் வாகனம் ஒன்று காத்தான்குடி நகரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று 16 வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு மாவட்ட குற்றவியல் போலீசார் மீட்டு காத்தான்குடி போலீசாரிடம் ஒப்படைத்தனர் மட்டக்களப்பு மாவட்ட குற்றவியல் பிரிவுக்கு கிடைத்த தகவலை அடுத்து இந்த வாகனம் மட்க பெற்றுள்ளது.
உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்புடன் தொடர்புபட்ட சந்தேகத்தில் கடந்த ஏப்ரல் 25ஆம் திகதி காத்தான்குடியில் வைத்து கைது செய்யப்பட்டு மொனராகலை சிறைச்சாலையில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள நபர் ஒருவரின் பெயரில் குறித்த வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளமையும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
