மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் காற்றுடனான கன மழை : வெள்ள நீர் ஊடறுத்து செல்வதனால் மக்களின் போக்கு வரத்து பாதிப்பு !!!!
நேற்று மாலை மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் காற்றுடனான கன மழையினால் மக்களின் போக்கு வரத்து மற்றும் நெற்காணிகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.
வெல்லாவெளி மண்டூர் பிரதான வீதியில் உள்ள மதகினூடாக வெள்ள நீர் ஊடறுத்து செல்வதனால் மக்களின் போக்கு வரத்து பாதிக்கப்பட்டுள்ளது.இதனால் கனகரக வாகனங்கள் மாத்திரம் பாதுகாப்பாக செல்வது குறிப்பிடதக்கது.மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் நோக்கில் வெல்லாவெளி பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

