Header Ads

Breaking News
recent

குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!!!!!

(மட்டக்களப்பு - ரஸ்மீன்)
மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லடி வேலூர் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் இன்று வியாழக்கிழமை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

கல்லடி வேலூர், காளி கோவில் முன்வீதியை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான 38 வயதையுடைய ஆண் ஒருவரே தனது வீட்டின் அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்துள்ளார். தற்கொலைக்கான காரணம் கடன் சுமையாக இருக்கலாம் என்ற விதத்தில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றது. 

இதேவேளை, புதுக்குடியிருப்பு முருகன் கோயில் வீதியிலுள்ள அடர்ந்த மரமுந்திரிகைக் காட்டினுள் முந்திரிகை மரத்தில் தொங்கியவாறு இளைஞரின் சடலம் ஒன்று உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. 

அதே வீதியைச் சேர்ந்த 21 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான கனகசுந்தரம் ஜதீஸ்காந்த் என்ற இளைஞரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. 


குறித்த இளைஞர் சில தினங்களின் முன்னர் காணாமல் போனதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சடலத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும், மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Powered by Blogger.