திருகோணமலையில் கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதையடுத்து இயல்பு நிலை ஸ்தம்பிதம்!!!
திருகோணமலை - மூதூர் பிரதேசத்தில் இன்றய தினம் (27) மூன்று கொரோனா தொற்றாளர்கள் இனம்காணப்பதையடுத்து.
மூதூர் பிரதேசத்தின் இயல்புநிலை ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
மூதுாரில் அனைத்து வியாபார ஸ்தளங்களும், அடைக்கப்பட்டு மக்கள் தங்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்தமையையிட்டு மூதுார் பிரதான வீதிகள் இவ்வாறு வெறிச்சோடிக் காணப்படுவதாகவும் .
மறு அறிவித்தல் வரை மக்கள் ஒன்று கூடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு மூதுார் பிரதேச சபை தவிசாளர் கௌரவ எம்.எம்.ஏ.அறுாஸ் அவர்களின் அறிவுறுத்தலுக்கமைய இவ் நடவடிக்கை மேற்றக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .




