பிரபல பெண்கள் பாடசாலை மாணவியின் பெற்றோரிற்கு கொரோனா தொற்று உறுதி!
கொழும்பு 7 இல் அமைந்துள்ள சென்.பிறிஜ்ஜட்ஸ் (St.BRIDGET’S) பெண்கள் பாடசாலை மாணவியின் பெற்றோர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த பாடசாலையின் அதிபர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
இதனையடுத்து குறித்த மாணவி மற்றும் அவரது குடும்பத்தினர் சுகாதார விதிமுறைகளுக்கமைவாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், குறித்த மாணவியினது குடும்பத்தினருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் அதன் முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் பாடசாலை அதிபர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் குறித்த பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் உடனடியாகத் தேவையான சுகாதார அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் இவ்விடயம் தொடர்பாக பாடசாலை நிர்வாகம் தேவையான சுகாதார நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தயாராகவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
