மனைவியை தாக்கிய ஒருவர் மூதூர் பொலிசாரால் கைது!!!!
(திருமலை - பாருக்)
மூதூர் பிரதேசத்தில் மனைவியை தாக்கிய ஒருவரை இன்று (22) கைது செய்துள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மூதூர் பிரதேசத்தில் மனைவியை தாக்கிய ஒருவரை இன்று (22) கைது செய்துள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஆலீம்சேனை, மூதூர் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய ஒருவரே பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் மூதூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆலிம்சேனை பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் பற்றி தெரிய வருவதாவது : சந்தேக நபர் கடற்றொழில் மேற்கொண்டு வருபவர் என்றும் இன்று (22) காலை கடலுக்குச் சென்று வீடு திரும்பிய நிலையில் கடும் பசி காரணமாக தனது மனைவியிடம் உணவு கேட்டுள்ளார். மனைவி உணவு செய்யவில்லை என்றவுடன் மூர்க்கத்தனமாக தாக்கி காயப்படுத்தியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அயல் வீட்டார்களினால் சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபரின் மனைவி மூதூர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதோடு, சந்தேக நபரை மூதூர் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
