Header Ads

Breaking News
recent

அமெரிக்க உயர் இராணுவ அதிகாரிகள் இலங்கை வருகை!


அமெரிக்க இராஜாங்க செயலாளரின் இலங்கை விஜயம் தொடர்பான பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக அமெரிக்க உயர் இராணுவ அதிகாரிகள் உள்ளடங்கிய குழுவினர் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ ஒரு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டிற்கு வருகை தரவுள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்வதற்கும் மேலதிகமாக மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.

அமெரிக்க உயர் இராணுவ அதிகாரிகள் 16 பேர் உள்ளடங்கிய குழுவினர் கட்டார் விமான சேவைக்கு சொந்தமான விமானமூடாக கடந்த 21 ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
Powered by Blogger.