Header Ads

Breaking News
recent

காலியில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது!!!


காலி – கித்துலன்பிட்டிய பகுதியில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு கப்பல்துறையில் பணிபுரியும் ஒருவருக்கே தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தென் மாகாண சுகாதார சேவை பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சந்தன சிரிதுங்க தெரிவித்துள்ளார்.

தொற்றுக்குள்ளானவரின் மனைவி, பிள்ளைகள் இருவர் உள்ளிட்டோரை PCR பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இதுவரை மாத்தறை மற்றும் திஸ்ஸமஹாராமவை சேர்ந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அப்பகுதிகளைச் சேர்ந்த 1500 க்கும் அதிகமானோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தென் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
Powered by Blogger.