பொது சுகாதார பரிசோதகர்களுக்கு மோட்டார் சைக்கில்கள் வழங்கிவைப்பு!!!!!
திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த பொது சுகாதார பரிசோதகர்களுக்கு மோட்டார் சைக்கில்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று (30) வெள்ளிக்கிழமை திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த 14 பொது சுகாதார பரிசோதகர்களுக்கு திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் மோட்டார் சைக்கில்கள் வழங்கப்பட்டது.
மேலும் இவ் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர். நாகலிங்கம் மயூரன், பிரதி சுகாதார சேவைகள் பிராந்திய பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய அதிகாரி எம். அச்சுதன் பிராந்திய தொற்று நோயியலாளர் டாக்டர் வே. குணராஜ சிங்கம், பிராந்திய பல் வைத்திய சேவை பணிப் பாளர் டாக்டர் கே. முரளிதரன் உட்பட பல வைத்திய அதிகாரிகளும் பொதுச்சுகாதார பரிசோதகர் களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.




