Header Ads

Breaking News
recent

திருகோணமலையில் இருந்து மட்டக்களப்பிற்கு கஞ்சா கடத்திய இருவர் கைது!!!!!


(ஹாசீம் சஜீத் - இறக்காமம்)
திருகோணமலையில் இருந்து மட்டக்களப்பிற்கு முச்சக்கரவண்டியில் ஒரு கிலோ கேரள கஞ்சாவை கடத்திச் சென்ற இருவரை வாகரையில் வைத்து பொலிசார் இன்று பகல் (26) கைது செய்துள்ளதுடன் முச்சக்கரவண்டி ஒன்றையும் மீட்டுள்ளதாக வாகரை பொலிசார் தெரிவித்தனர் 

வாகரை பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றையடுத்து வாகரை பொலிஸ் பொறுப்பதிகாரியின் ஆலோசனைக்கமைய பொலிஸ் புலனாய்வுத்துறையினர் சம்பவதினமான இன்று (26) காலையில் இருந்து வாகரை பொலிஸ் நிலையத்துக்கு அருகில் கண்காணிப்பில் ஈடுபட்டனர் 

இதன்போது பகல் 12 மணியளவில் திகோணமலையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியை நிறுத்தி சோதனையிட்ட போது பின்பகுதியிலுள்ள இருக்கையின் பின்பகுதியில் பொருத்தப்பட்ட ஸ்பீக்கரின் உள் பகுதியில் ஒழித்து வைக்கப்பட்டிருந்த ஒரு கிலோ கேரள கஞ்சாவை மீட்டதுடன் இருவரை கைது செய்ததுடன் முச்சக்கரவண்டியையும் மீட்டுள்ளனர். 

இதில் கைது செய்யப்பட்டவர்கள் திருகோணமலை சீனக்குடா, மட்டிக்கழி பிரதேசத்தைச் சேர்ந்த 26 ,28 வயதுடையவர்கள் எனவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரை பொலிசார் மேற்கொண்டுவருவதாகவும் இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்
Powered by Blogger.