Header Ads

Breaking News
recent

Jamaliyans Bsc அணிக்கு எதிரான போட்டியில் யுனைடெட் கிங்ஸ் அணி மாபெரும் வெற்றி !!!!


இக்பால் மைதானத்தில் இன்று (24) நடைபெற்ற Jamaliyans Bsc அணிக்கு எதிரான 50 ஓவர்கள் கொண்ட போட்டியில் யுனைடெட் கிங்ஸ் அணி 231 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய யுனைடெட் கிங்ஸ் அணியினர் அப்ரிட், சஜீர் ஆகியோரின் அரைச்சதத்தின் உதவியோடும் NM இஷாமின் வேகமான துடுப்பாட்டத்தின் உதவியோடும் 43.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 273 ஓட்டங்களை பெற்றனர்.

மேலும் 274 என்ற இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய Jamaliyans Bsc அணியினர் 11.3 ஓவர்களில் 42 ஓட்டங்களை மாத்திரம் பெற்ற நிலையில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 231 ஓட்டங்களால் தோல்வியை தழுவினர்.


பந்துவீச்சில் ஆரம்ப பந்துவீச்சாளரான சஜாத் ஹெற்றிக் அடங்களாக 5 விக்கெட்டுகளை கைப்பற்ற, 3 பந்துகளை மாத்திரம் வீசிய நவ்மி 2 விக்கெட்டுகளையும் அப்ரிட் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.




Powered by Blogger.