Header Ads

Breaking News
recent

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் விசம் அருந்தி தற்கொலை முயற்சியில் 16 வயது சிறுமி பலி!!!!


திருகோணமலை – ஆனந்தபுரி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் நஞ்சு அருந்தியதில் 16 வயதுடைய சிறுமி உயிரிழந்துள்ளார்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேரே இவ்வாறு விசம் அருந்திய நிலையில், அதில் 16 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.

திருகோணமலை பொதுவைத்தியாசாலையில் இன்று வெள்ளிக்கிழமை காலை ஐவரும் அவசரப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட போதும், 16 வயதுடைய விதுஷிகா எனும் சிறுமி உயிரிழந்தார்.

இதுவரையில் அக்குடும்பத்தினரின் தற்கொலைக்கு காரணம் தெரியவில்லை என ஆரம்பக்கட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

எனினும் திருகோணமலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது
Powered by Blogger.