Header Ads

Breaking News
recent

256 மேல் மாகாண பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா!


மேல் மாகாண பொலிஸ் நிலையங்களில் பணிபுரியும் 256 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், அதில் 06 பேர் பூரணமாக குணமடைந்துள்ள நிலையில், தொடர்ந்தும் 250 பேர் சிகிச்சைப் பெற்று வருவதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேலும், தனிமைப்படுத்தல் நிலையங்களில் 317 மேல் மாகாண பொலிஸ் அதிகாரிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த அலுவலகம் தெரிவித்துள்ளது.

சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை 1,447 ஆகும்.
Powered by Blogger.