தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய 7 பேர் கைது!
தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியினை தவிர்த்து செயற்பட்ட குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனை கூறியுள்ளார்.
இதேவேளை தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் கடந்த 30 ஆம் திகதி முதல் இதுவரை 290 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதிப்பொலிஸ் மா அதிபர் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன மேலும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் ட்ரோன் கமெராக்கள் மூலம் கண்காணிக்கும் நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என பிரதிப்பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கையூடாக இதுவரை 117 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்றைய நாளில் மாத்திரம் 95 பேர் கைது செய்யப்பட்டதுடன் முன்னதாக 22 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் ஹெலிகொப்டர் மற்றும் ட்ரோன் கெமராக்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பு நடவடிக்கையின் போது குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
