பரீட்சை பெறுபேற்றுச் சான்றிதழை இணையத்தில் பெற்றுக்கொள்ள முடியும் : பரீட்சைத் திணைக்களம்
இலங்கை பரீட்சைத் திணைக்களம் தற்போது 2001 ஆம் ஆண்டிற்கு பின்னர் க.பொ.த (சா/த) மற்றும் (உ/த) பரீட்சைக்கு தோற்றியோரின் பரீட்சை பெறுபேற்றுச் சான்றிதழை வீட்டிலிருந்தே பெற்றுக் கொள்ளக்கூடிய வாய்ப்பை வழங்குகிறது.
அதனடிப்படையில் certificate.doenets.lk என்ற இணைப்பினூடாக சென்று தரவுகளை பூரணப்படுத்தலாம்.
கட்டணத்தை கடனட்டையை அல்லது அஞ்சல் அலுவகத்தில் செலுத்திய பற்றுச்சீட்டு இலக்கத்தை பயன்படுத்தி செலுத்த முடியும்.
காலை 9.30 மணியளவில் விண்ணப்பித்த 20 நிமிடத்தில் உங்கள் சான்றிதழ் பிரதியெடுக்கப்பட்டுவிட்டதாகவும், தொடரும் 20 நிமிடத்தில் தபாலில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தொலைபேசியில் குறுஞ்செய்தி மூலம் தகவல் பெற முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது
