கொழும்பில் தொடர்ந்தும் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை!!!
நாட்டில் நேற்றைய நாளில் அடையாளங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுள் அதிகளவானவர்கள் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என கொரோனா தடுப்பு தேசிய செயலணி தெரிவித்துள்ளது.
இதன்படி கொழும்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான 201 பேர் நேற்றைய நாளில் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன் கம்பஹா மாவட்டத்தில் 82 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 32 பேரும் காலி மாவட்டத்தில் 9 பேரும் கண்டி மாவட்டத்தில் நால்வரும் குருணாகல் மாவட்டத்தில் மூவரும் நுவரெலியா மாவட்டத்தில் இருவர் உட்பட புத்தளம் மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர் ஒருவர் நேற்றைய நாளில் அடையாளங் காணப்பட்டனர்.
இதேவேளை நேற்யை நாளில் 401 தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டிருந்தனர்.
அவர்களுள் 398 பேர் உள்ளுரில் அடையாளங் காணப்பட்ட நிலையில் ஏனைய மூவர் வெளிநாடுகளில் இருந்து நாடுதிரும்பியவர்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை ஆகியவற்றுடன் தொடர்புடைய கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 564 ஆக காணப்படுகின்றது.
நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 75 ஆக காணப்படுகின்றது
மேலும் கொரோனா உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 66 ஆக அதிகரித்துள்ளதுடன் ஐயாயிரத்த 799 பேர் வைத்தியிசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
