முல்லைத்தீவில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் படுகாயம்!!!
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துடன் பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது
பரந்தன் புதுக் குடியிருப்பு பிரதான வீதியில் யாழ்ப்பாணத்தில் இருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து உடன் பின்னால் அதிவேகமாக வருகைதந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் மோட்டார் சைக்கிள் செலுத்திய சாரதி படுகாயங்களுடன் புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
பேருந்தில் வருகைதந்த பயணிகளுக்கு எந்தவித பாதிப்புகளும் ஏற்படாத நிலையில் மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

