அட இது ஆங்கில திரைப்பட நடிகையா ??? ரசிகர்கள் வியந்து வருகின்றனர்.
பிக் பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டவர் லொஸ்லியா. இலங்கையில் இருந்து சென்னை வந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்ட லொஸ்லியா மூன்றாவது இடத்தை பிடித்துக் கொண்டார். பிக் பாஸ் வீட்டில் கவினுடன் காதல், சேரனுடன் அப்பா என்ற உறவு என இருந்தாலும் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததும் எந்த உறவுகளுடனும் தொடர்பில் இல்லாமல் இருக்கிறார் லொஸ்லியா.
ஆனால் தற்போது மூன்று திரைப்படங்களில் நடித்து வருகிறார். அவர் பற்றிய எத்தனை சர்ச்சைகள் வந்தாலும் கண்டுகொள்ளாத லொஸ்லியா தனித்து நின்று வெற்றி பெற்று வருகிறார். எந்த சினிமா தொடர்பும் இல்லாத லொஸ்லியாவால் இந்தளவு வளர முடிந்துள்ளது என்பது புதுமை தான்.
இந்த நிலையில் லொஸ்லியா அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி வருகிறார். அண்மையில் லொஸ்லியா நடத்திய போட்டோ ஷூட் ரசிகர்கள் மத்தியில் வேகமாக வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களில் லொஸ்லிய ஆங்கில ஹீரோயின்கள் போல் அசத்தும் அழகில் இருக்கின்றார்.
அட இது ஆங்கில திரைப்பட நடிகையா என ரசிகர்கள் வியந்து வருகின்றனர்.!!

