நாளை ஊரடங்கு தளர்த்தப்பட்ட போதிலும் தொடர்ந்தும் பல பகுதிகள் முடக்கப்பட்டுள்ளது!!!!
கம்பஹா மாவட்டத்தின் வத்தளை, பேலியகொடை, கடவத்தை, ராகம, நீர்கொழும்பு, பமுனுகம, ஜா-எல மற்றும் சபுகஸ்கந்த ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சற்று முன்னர் தெரிவித்தார் .
மேலும் குருநாகலை மாவட்டத்தின் குருநாகலை மாநகரசபைக்கு உட்பட்ட பகுதிகள் மற்றும் குலியாபிட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன்.
களுத்துறை மாவட்டத்தின், ஹொரனை, இங்கிரிய மற்றும் மேற்கு கிராம சேவை அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்தார்.
மேலும் கேகாலை மாவட்டத்திற்கு உட்பட்ட மாவனெல்ல மற்றும் ருவன்வெல்ல ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக.
இராணுவத்தளபதியின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
