Header Ads

Breaking News
recent

பா.உ.றிஸாட் பதியுதீனை விடுதலை செய்யுமாறு ஆர்ப்பாட்டம்

 

கைது செய்யப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னால் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினறுமான ரிஸாட் பதியுதீனை விடுதலை செய்யகோரி முஸ்லீம் இளைஞர்கள் சிலரால் இன்றையதினம் காலை மன்னார் சுற்றுவட்டப்பகுதியில் அடையாள கவனயீர்ப்பு போராட்டம் இடம் பெற்றது.



கொரோனா காரணமாக இறந்து போகும் முஸ்லீம்களின் ஜனாஸாக்களை எரிப்பதை நிறுத்த வேண்டும் எனவும் அதே நேரத்தில் சிறுபான்மை இனத்தின் தலைவராக இருக்கும் ரிஸாட்பதியுதீனை விடுதலை செய்யக்கோரியும் குறித்த கவனயீர்பு போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் கோரிக்கை முன்வைத்தனர்.



முஸ்லீம் பராளுமன்ற ஜனாஸாக்களே உங்களுக்கு முதுகெலும்பு இருக்கின்றதா? நீங்கள் மெளனிகளாக இருப்பதற்கு இறக்கலாம்நீங்கள் எறிப்பது  உடலை அல்ல உலக முஸ்லீம்களின் உள்ளத்தை, சிறுபான்மை தலைவரான ரிஸாட்பதியுதீனை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் எனவும் சிறந்த நிர்வாக திறன் கொண்ட ஜனாதிபதி சிறுபான்மை மக்களின் உரிமைகளை பெற்றுதரவேண்டும் போன்ற பல்வேறு பதாதகளை ஏந்தியவாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடதக்கது.



Powered by Blogger.