யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை கடலில் குளித்துக்கொண்டிருந்த இருவர் அலையில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் காணாமற்போயுள்ளனர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் காங்கேசன்துறை தல்செவன இராணுவ நட்சத்திர விடுதிக்கு அருகாமையில் நேற்று (29) பிற்பகல் ஒரு மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
தையிட்டியைச் சேர்ந்த 24 மற்றும் 32 வயதுடைய இருவரே இவ்வாறு கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் காணாமற் போயுள்ளனர் என போலிஸார் தெரிவித்துள்ளனர்.
அலையில் அடித்துச் செல்லப்பட்ட இருபரையும், தேடும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளதாகவும் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காங்கேசன்துறை பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட இருவர் மாயம் : தேடும் பணி தீவிரம்!!!!!
Reviewed by
maxmedia
on
November 30, 2020
Rating:
5