தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பயனாளர்களுக்கு விசேட அறிவித்தல்கள் சில வழங்கப்பட்டுள்ளன.
(திருமலை நிருபர்)
இதற்கமைய, பற்றுச்சீட்டுத் தொடர்பில் சிக்கல்கள் காணப்படுமாயின், பற்றுச்சீட்டின் பின்புறத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தேசிய வடிகாலமைப்பு சபையின் waterboard.lk என்ற இணைத்தளத்தின் ஊடாகவும் கட்டணத்தை செலுத்த முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, நீரைப் பெற்றுக் கொள்வதில் சிக்கல்கள் இருப்பின், 24 மணித்தியாலம் செயற்பாட்டில் இருக்கும் 1939 என்ற துரித தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
