Header Ads

Breaking News
recent

நாட்டில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன!!!!


கொழும்பில் மேலும் 5 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணியின் தலைவரும் இராணுவத் தளபதியுமான ஷவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்படி, கோட்டை, புறக்கோட்டை, மருதானை, டேம் வீதி மற்றும் கொம்பனித் தெரு ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், எதிர்வரும் திங்கட்கிழமை 16ஆம் திகதி காலை 5 மணிமுதல் இந்த தனிமைப்படுத்தல் அமுலாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் தொடர்ந்தும் அவ்வாறே நீடிக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.