Header Ads

Breaking News
recent

திருகோணமலையில் கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டம் அதிகரிப்பு : உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானம்


(ADMIN)
திருகோணமலை நகராட்சிமன்ற எல்லைப்பகுதிக்குள் கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக திருகோணமலை நகராட்சி மன்ற தலைவர் தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் நகர எல்லைக்குள் கடந்த சில நாட்களாக வீதிவிபத்துக்கள் ஏற்பட்டு பாரிய விளைவுகளை ஏற்படுத்தியுள்ளதாக திருகோணமலை நகராட்சி மன்ற தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார் . 

இந்த நிலையில் இன்று  அதிகாலை (20) தெருவில் நின்ற மாடுகள் யாவும் பிடிக்கப்பட்பட்டு . இதில் 17 மாடுகள் திருகோணமலையில் நகர மலையருவி காணிக்குள்ளும் 21 மாடுகள் லிங்கநகர் நகராட்சிமன்ற காணிக்குள்ளும் 12 மாடுகள் உவர்மலையிலுள்ள ஓர் காணியிலும் மொத்தமாக 50 மாடுகள் அடைக்கப்பட்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 


இம் மாடுகளுக்கு உரிமையாளர்கள் யாரென விபரங்கள் திரட்டப்பட்டு வருவதாகவும் மீண்டும் இவர்களுடைய மாடுகள் பிடிக்கப்பட்டால் பொலிசாரும் நகரசபையும் இணைந்து கால்நடை உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Powered by Blogger.