மருதனார்மடம் பொதுச் சந்தை நேற்றைய தினம் 11பேருக்கு கோவிட் -19 தொற்று உறுதி!!!!
யாழ்ப்பாணம் – மருதனார்மடம் பொதுச் சந்தை கோரோனா வைரஸ் கொத்தணியில் நேற்றைய தினம் 11பேருக்கு கோவிட் -19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது
இதன் மூலம் மருதனார்மடம் கொரோனா வைரஸ் கொத்தணியின் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 88ஆக அதிகரித்துள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் .கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த 5 பேரும், உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த இரண்டு பேரும், சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த ஒருவர் மற்றும் இளவாளை ,மல்லாகம், அளவெட்டி பகுதிகளை சேர்ந்தவர்ளே இவ்வாறு தொற்றுக்குள்ளாகியுள்ளதாக ஆ.கேதீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி யாழ்.பல்கலைக்கழக மருத்துபீட ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் 6 பேருக்கும், யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் 3 பேருக்கும் மற்றும் முல்லேரியா ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 2 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கேதீஸ்வரன் மேலும் குறிப்பிட்டுள்ளார்
