Header Ads

Breaking News
recent

கிழக்கில் அதிகரிக்கும் கொரோனா தொற்று : 24 மணித்தியாலத்தில் 30 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்!!!


கிழக்கு மாகாணத்தில் கடந்த 12 மணித்தியாலங்களில், 30 கொரோனா தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதாக, கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் லதாகரன் தெரிவித்துள்ளார் .

இதேவேளை, வைத்திய நிபுணர்கள்,வைத்தியர்கள் மற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் வெளி மாவட்டங்களுக்கு சென்று வருவதினாலேயே தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக திருகோணமலை பொது வைத்தியசாலை சிற்றூழியர்கள் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலை பொது வைத்தியசாலையில் கடமையாற்றி வரும் வைத்திய நிபுணர்கள், வாரத்திற்கு ஒரு முறை கொழும்பு, கம்பஹா மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு சென்று வருவதாகவும் ,அவர்களுக்கு PCR பரிசோதனைகள் மற்றும் அன்டிஜென் (Antigen) பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதில்லை எனவும் சிற்றூழியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

திருகோணமலை பொது வைத்தியசாலையில் கடமையாற்றி வந்த இரண்டு வைத்தியர்களுக்கும், மூதூர் வைத்தியசாலையில் குடும்பநல உத்தியோகத்தர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையிலேயே, திருகோணமலை பொது வைத்தியசாலை சிற்றூழியர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்றைய தினம் 416 பேருக்கு Covid-19 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கமைய, அவர்களில் புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாக, யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
Powered by Blogger.