3 மோட்டார் சைக்கிள்கள் மோதல் - இரு மோட்டார் சைக்கிளில் பயணத்தவர்களுக்கு காயம்
இறக்காமம் பிரதேசத்தின் பிரதான சாலையில் இலங்கை வங்கிக்கு முன்பாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் 3 மோட்டார் சைக்கிள் சம்பந்தப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.
சாலையில் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கில் ஆனது எதிர்த்திசையில் வந்த மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இரண்டு மோட்டார் சைக்கிளில் சாரதிகளும் பலத்த காயங்களுடன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த விபத்துக்கு முக்கிய காரணம் :-
சாலையில் சென்றுகொண்டிருந்த மற்றுமொரு மோட்டார்சைக்கிள் ஆனது பாதையை கடக்க முற்படுகையில் விபத்துக்குள்ளான இரண்டு மோட்டார் சைக்கிள்களும் விபத்து ஏற்பட காரணமாக இருந்தது என நேரில் கண்டவர்கள் கருத்து தெரிவித்தனர்.


