ஹெரோயின் மற்றும் 59 மில்லியன் ரூபா பணத்துடன் பெண்ணொருவர் உட்பட மூன்று பேர் கைது!!!!
300 கிராம் ஹெரோயின் மட்டும் ரூ. 59 மில்லியன் பணத்துடன் பெண்ணொருவர் உட்பட மூன்று பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது,
வெலிவிட, மாலபே மற்றும் கடுவலை ஆகிய பிரதேசங்களில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

