Header Ads

Breaking News
recent

திருகோணமலையில் இன்று 66 பேருக்கு PCR பரிசோதனை பரிசோதனைப் பெறுபேறுகள் இரண்டு நாட்களில்!!!


திருகோணமலை – உப்புவெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதிகளில், பல்வேறு நிறுவனங்களில் பணிபுரியும் நபர்களுக்கு இன்று PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி, எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மற்றும் ஹோட்டல்கள் உள்ளிட்ட நிறுவனங்களில் பணிபுரியும் 66 பேருக்கு, இவ்வாறு PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன

இதற்கமைய, சீனக்குடா, உப்புவெளி, சாம்பல் தீவு, ஆண்டாங் குளம் மற்றும் அலஸ் தோட்டம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நபர்களுக்கு, இவ்வாறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக, எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதன்படி, அவர்களின் பரிசோதனைப் பெறுபேறுகள், மேலும் இரண்டு நாட்களில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது
Powered by Blogger.