Header Ads

Breaking News
recent

கொரோனா சுகாதார விதி முறைகளுக்கு அமைய 73வது சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு தீர்மானம்


(புத்தளம் சயானா) 
கொரோனா சுகாதார ஒழுங்கு விதிகளுக்கு அமைய நாட்டின் 73ஆவது சுதந்திர தினத்தை கொண்டாட அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அரச பாதுகாப்பு, உள்நாட்டு அலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற தேசிய சுதந்திர தின கொண்டாட்ட ஏற்பாடுகளின் முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தில் கலந்துகொண்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

'செழிப்பான நாளை வளமான தாய்நாடு' என்ற தொனிப்பொருளில், தேசிய சுதந்திர தின வைபவத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் சுதந்திர சதுக்கத்தில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
Powered by Blogger.