இலங்கை தயாரிப்பு (கேகாலை) கோவிட் தடுப்பு மருந்து வழங்கல் நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்டது...!
ஹெல ஆயுர்வேத மருந்து தயாரிப்பாளர் தம்மிகா பண்டார, தனது கோவிட் தடுப்பு மருந்து வழங்கள் நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்டதாக தெரிவித்தார்.
கேகாலை மாவட்ட செயலாளருடனான சந்திப்பு மற்றும் அவரது அறிவுறுத்தலின் பேரில் அவர் இதை அறிவித்துள்ளார்.
இது குறித்த மருத்துவ அறிக்கைகள் வரும் வரை சிரப் விநியோக நடவடிக்கை வேண்டாம் என்று அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
5000 பேருக்கு சிரப்பை இலவசமாக விநியோகிப்பதாக அறிவித்ததை அடுத்து இன்று ஆயிரக்கணக்கான மக்கள் டாக்டர் தம்மிகாவின் வீட்டுக்கு வந்தனர்.
இது சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி பாவனை செய்த பின்னர் ஊடகங்களின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
