மூதூர் மற்றும் தோப்பூர் பொதுச் சந்தை மறு அறிவித்தல் வரை பூட்டு!!!
திருகோணமலை மாவட்டத்தில் அதி தீவிரமாக பரவிவரும் கோவிட் -19 கொரோனா தொற்று மூதூர் பிரேதேசத்திலும் பரவக்கூடிய சாத்தியக்கூறு அதிகம் இருப்பதனால். மூதூரில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகின்ற காரணத்தினாலும் மேலும் பரவாமல் கட்டுப்படுத்தும் முகமாக மூதூர் மற்றும் தோப்பூர் பொதுச் சந்தை மறு அறிவித்தல் வரும் வரை நடைபெறாது என மூதூர் பிரதேச சபை தவிசாளர் M.M.A. அரூஸ் அவர்கள் தெரிவித்துள்ளார் .
மேலும் வீதியோரங்களில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதுடன் . குறிப்பாக நீதிமன்றத்தில் இருந்து பெற்றோல் செட் வரையான பிரதான வீதி மற்றும் மின்சார நிலைய வீதி போன்ற பகுதிகளில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக மூதூர் பிரதேச சபை தவிசாளர் M.M.A. அரூஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்.
,
,
