புதையல் தோண்டிய நிலையில் ஆறு பேர் கைது
திருகோணமலையில் குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வடலிக்குளம் காட்டு பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டின் பேரில் ஆறு பேரை நேற்று (13) மாலை கைது செய்துள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குச்சவெளி வடலிக்குளம் காட்டுப்பகுதியில் அடையாளம் தெரியாதோர் காட்டுப்பகுதிக்குள் சென்றுள்ளதாக பொலிஸாருக்கு வழங்கப்பட்ட இரகசிய தகவலையடுத்து அங்கு விரைந்த பொலிஸார் அவர்களைக் கைது செய்ததாகவும் அவர்களிடமிருந்து சில பூஜைக்குப் பயன்படுத்தும் பொருட்களும் மற்றும் புதையல் தோன்றுவதற்காக பயன்படுத்திய அலவாங்கு,மண்வெட்டி போன்ற இரும்பு ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

