Header Ads

Breaking News
recent

வீதியில் வைத்து குடும்பஸ்தர் ஒருவர் குத்திக்கொலை !!!!





யாழ்ப்பாணம் – தென்மராட்சி- மீசாலை, தாட்டான்குளம் வீதியில் வைத்து குடும்பஸ்தர் ஒருவர் குத்திக் கொல்லப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று நண்பகல் 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொடிகாமம், இராமாவில் பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய ஐயாத்துரை மோகனதாஸ் என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இனந்தெரியாத நபர்களால் குத்திக் கொல்லப்பட்டுள்ளார்.

அவரது கையில் ஒரு காயமும், நெஞ்சில் ஆழமான கத்திக்குத்துக் காயமும் ஏற்பட்டுள்ளது.

கூலித் தொழிலாளியான குறித்த குடும்பஸ்தர் துவிச்சக்கர வண்டியில் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த போதே கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள அதே வேளை சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Powered by Blogger.