Header Ads

Breaking News
recent

உயிரிழப்பவர்களின் இறுதிக் கிரியைகள் தொடர்பில் முக்கிய தீர்மானம்...!


(ஹாசிம் சஜித் - இறக்காமம்)
கொரோனா தொற்றினால் உயிரிழக்கு நபர்களின், இறுதிக் கிரியைகள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட விசேட நிபுணர்கள் குழு, இன்று மாலை ஒன்றுகூடவுள்ளது.

கொரோனா தொற்றினால் உயிரிழக்கு நபர்களின் உடல்களை புதைப்பதற்கு அனுமதி வழங்குமாறு, முஸ்லிம் சமூகத்தினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், உடல்களை புதைப்பதற்கான சாத்தியக் கூறுகள் தொடர்பில் ஆராய்வதற்காக, பிரதமர் மகிந்த ராஜபக்ஸவினால் அண்மையில் குழுவொன்று நியமிக்கப்பட்டது.




இந்த நிலையிலேயே, குறித்த குழு இன்றையதினம் ஒன்றுகூடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.




இதேவேளை, கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் உடல்களை புதைக்கும் பட்சத்தில், நிலத்தடி நீரின் ஊடாக வைரஸ் பரவுவதற்கான எந்தவித சாட்சியங்களும் இல்லை என, தொற்றுநோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் பேராசிரியர் மலிக் பீரிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.




2003 ஆம் ஆண்டு காலப்பகுதியில், நாட்டில் சார்ஸ் வைரஸை அடையாளங் கண்டு கொள்ளவும், அதனைக் கட்டுப்படுத்துவதற்காகவும், விசேட வைத்திய நிபுணர் மலிக் பீரிஸ், முக்கிய பங்களிப்புக்களை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.