Header Ads

Breaking News
recent

வைரலாகும் பார்வையற்ற பாபா வாங்காவின் பரபரப்பு தகவல்

 2021 ஆம் ஆண்டு வலிமையான டிராகன் ஒட்டுமொத்த மனித குலத்தையே கைப்பற்றும் என பாபா வாங்கா கூறிய கணிப்பு தற்போது வைரலாகி உள்ளது,

பல்கேரியன் நாட்டை சேர்ந்த பெண் பாபா வாங்கா. கண் தெரியாத இவர் தனது 85 வயதில் 1996 ஆம் ஆண்டு காலமானார்.

இவர் 50 ஆண்டுகளில் 100-க்கும் மேற்பட்ட பல்வேறு தகவல்களை முன் கூட்டியே கணித்து கூறி உள்ளார். 

இவர் கூறியதில் 85 சதவீதத்திற்கும் மேற்பட்டவை பலித்தும் உள்ளன, நடந்தும் உள்ளன.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நாஸ்டர்டாம்ஸ் உலகில் கி.பி.3797 வரை என்னவெல்லாம் நடக்கப் போகிறது என்பதைக் கூறியுள்ள அபூர்வ ஜோதிடர். 

சுமார் 3000 பலன்களை இவர் கூறியுள்ளதும் அவை அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக நடந்து வருவதும் உலகில் உள்ள அனைவரையும் திகைக்க வைக்கிறது.

14-12-1503ல் பிறந்த இவர் 2-7-1566ல் மறைந்தார். இவர் கூறிய பலன்கள் பெரும்பாலும் அழிவையும், விபத்துக்களையும், கொலைகளையும் சுட்டிக் காட்டுவதால் சிறிது பயத்துடன் தான் அவரது நூலை அணுக வேண்டியிருக்கிறது.

அதுபோல் தான் இந்த பெண் பாபா வாங்கா. இவரது கணிப்புகளிலும் அதிகம் பலித்து உள்ளன.

2016 ஆண்டு மிகப்பெரிய ஐ எஸ் போர் தொடங்கும், ஐரோப்பியர்களுக்கு எதிராக ரசாயன ஆயுதத்தை பயன்படுத்துவர்.

 அவர்கள் 2043 ஆம் ஆண்டு ரோமை மைய புள்ளியாக கொண்டு தங்கள் ஐ எஸ் ஆட்சியை நிறுவுவார்கள் என கூறினார்.

அமெரிக்காவில் உள்ள வர்த்தக கோபுரங்கள் மீது விமான தாக்குதல் நடைபெறும் எனக் கூறினார். 

அதேபோன்று அந்த தாக்குதல் நிகழ்ந்து உலகையே அதிர வைத்தது.

 அமெரிக்காவின் 44-வது ஜனாதிபதியாக ஒரு கருப்பினத்தவர் பதவி ஏற்பார் என்று கணித்தார்.

அதே போல், ஒபாமா ஜனாதிபதியாக பதவியேற்றார். 

பின்னர், 2016-ஆம் ஆண்டு ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் வலிமை பெறும் எனவும், ஐரோப்பாவில் இருந்து இங்கிலாந்து விலகும் எனவும் கணித்தார்.

இதைத் தொடர்ந்து தன்னுடைய குடிமக்கள் மீது சிரியா ஜனாதிபதி ரசாயன தாக்குதலை நடத்துவார் என கணித்தார், அதுவும் நடந்தது.

Powered by Blogger.