வாயிற்கதவொன்று கழன்று விழுந்ததில் அதில் சிக்கி பரிதாபமாக ஒருவர் பலி!!!!
இன்று காலை 7.30 மணியளவில் இவ்வனர்த்தம் இடம்பெற்றிருப்பதாக எமது செய்தியாளர் தொிவிக்கின்றார்.
70 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிாிழந்தவராவார்.
வாயிற்கதவை மூடும் சந்தர்ப்பத்திலேயே இவ்வனர்த்தம் நிகழ்ந்துள்ளமை அவ்விடத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கமராவில் பதிவாகியிருந்தது.
