Header Ads

Breaking News
recent

அட்டகாச யானையும் - அடக்கிய பொலிஸாரும்

(சபூருத்தீன் - கஹடகஸ்திகிலிய)

நள்ளிரவு 12:45 மணியளவில் அநுராதபுரம் கஹடகஸ்திகிலிய நெலுகொல்லாகட பகுதியில் யானை ஒன்று பொலிஸாரின் துப்பாக்கி சூட்டிற்கு இழக்கான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 

நெலுகொல்லாகட பகுதியில் உள்ள விவசாயிகளின் பயிர்களில் அதிகமான பகுதிகளை சேதமாக்கியதுடன் அந்த பகுதி மக்களையும் விரட்டி திரிந்தது .


இதனை அடுத்து போலீசாருக்கு அந்த பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். 

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் யானையினை காட்டுப்பகுதிக்கி விரட்டிய போது அந்த யானை பொலிஸாரை தாக்க முற்பட்டது. 


அப்போது பொலிஸார் ஒருவர் யானையினை துப்பாக்கியால் சுட்டதனை அடுத்து யானை இறந்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


வீடியோ காணொலி இணைப்பு 




Powered by Blogger.