Header Ads

Breaking News
recent

மட்டக்களப்பு - வைத்தியசாலை ஊழியர்களுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது

 மட்டக்களப்பு – தேத்தாதீவில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த சிறுமி உயிரிழந்தமை தொடர்பில் வைத்தியசாலை ஊழியர்களுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில், நீதவான் A.C.ரிஸ்வான் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்த போது இடம்பெற்ற சம்பவங்களுடன் தொடர்புடைய வைத்தியர் உள்ளிட்ட அனைவரையும் கைது செய்து மன்றில் ஆஜராக்குமாறு இதன்போது நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

தேத்தாதீவில் கடந்த 20 ஆம் திகதி லொறி ஒன்றில் மோதி 09 வயது சிறுமி பலத்த காயமடைந்தார்.

காயமடைந்த சிறுமி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

கதிரியக்கவியலாளர்கள் தொடர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டமையால், விபத்திற்குள்ளான சிறுமிக்கு உயிர்காப்பு படங்களை பெற முடியாது போனதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் க.கலாரஞ்சனி அன்றைய தினமே ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தி அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், கதிரியக்க பிரிவினர், அன்றைய தினம் கடமையிலிருந்த வைத்தியர் உள்ளிட்ட சிலருக்கு மட்டக்களப்பு நீதவான் இன்று பிடியாணை பிறப்பித்துள்ளார்.

Powered by Blogger.