Header Ads

Breaking News
recent

மழை காரணமாக புதைக்கப்பட்ட பெருமளவு ஆயுதங்கள் மீட்பு

 கிளிநொச்சி அறிவியல்நகர் காட்டுப்பகுதியில் அண்மையில் பெய்த மழையின்போது பெருமளவு ஆயுதங்கள் வெளியே வந்துள்ளது

புதைத்து வைக்கப்பட்டிருந்து ரி 56 ரக துப்பாக்கிகள் மற்றும் ரவைகளே இவ்வாறு விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தகவலறிந்த விசேட அதிரடிப்படையினர் அவற்றை இன்று மீட்டுள்ளனர்.

இதன்போது ரி56 ரக துப்பாக்கிகள் 05, ரவைக்கூடு ஒன்று மற்றும் 30 ரவைகளும் மீட்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மீட்கப்பட்ட பகுதி விடுதலைப்புலிகளின் சூட்டு பயிற்சி இடம்பெறும் பகுதி என்பதால் அவை விடுதலைப்புலிகள் பயன்படுத்தியதாக இருக்கலாம் என கூறப்படுகிறது.



Powered by Blogger.