Header Ads

Breaking News
recent

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஐவர் உயிரிழப்பு !!!



கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஐவர் உயிரிழந்துள்ளமை சற்று முன்னர் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி பனாகொடை பிரதேசத்தை சேர்ந்த 71 வயதான ஆண் ஒருவரும், கொழும்பு 8 பிரதேசத்தை சேர்ந்த 52 வயதான ஆண் ஒருவரும், கொழும்பு 12 பிரதேசத்தை சேர்ந்த 71 வயதான பெண் ஒருவரும், கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் கொழும்பு 2 பிரதேசத்தை சேர்ந்த 44 வயதான ஆண் ஒருவரும், பண்டாரகம பிரதேசத்தை சேர்ந்த 49 வயதான ஆண் ஒருவரும், கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 176 ஆக உயர்வடைந்துள்ளது.
Powered by Blogger.