Header Ads

Breaking News
recent

காருடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதல் - சம்பவ இடத்தில் ஒருவர் பலி


மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதுக்குடியிருப்பில் இன்று காலை 9 மணியளவில் இடம்பெற்ற பாரிய வீதி விபத்துச் சம்பவம் ஒன்றில் இளைஞர் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளதாக பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிசார் தெரிவித்தனர்.


புதுக்குடியிருப்பு பிரதான வீதி சந்தியில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.


கல்முனை நோக்கி வந்த காரும் மட்டக்களப்பு நோக்கிவந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பங்குடாவெளியைச் சேர்ந்த தனூசன் என்ற இளைஞரே பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இறந்தவரின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

காத்தான்குடி பொலிசார் மேலதிக விசாலனைகளை மேற்கொண்டுள்ளனர்.


Powered by Blogger.